Tuesday, 22 July 2014

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

 

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்

. . . . உலகோர்க் கெல்லாம் காரமா

மூலியடா பங்கம்பாளை கொண்டு

. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்

கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்

. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்

நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா

. . . . அன்றான ஆகாசகருடன் மூலி

அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.


பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

3 comments:

  1. இந்த மூலிகைகளை வளர்க்க இப்போ எந்தப் பட்டணத்தில் இடமுண்டு.
    //பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் //வந்தது தெரிந்தால் இது, ஆனால் தெரியாமல் வந்திருந்து தாக்குமே!

    ReplyDelete
  2. "நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே. உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே?"

    இந்த பாடல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பாம்புகளையும் கட்டு படுத்தும் ஆற்றல் பெற்றது எனவே வீட்டில் உள் பாம்பு வந்தால் இந்த பாடலை 7 முறை பாடினால் வந்த பாம்பு வந்த சுவடு தெரியாமல் ஓடி மறையும்.

    எச்சரிக்கை : பாடலை பாடும் போது நடிகர் திலகம் சிவாஜியை நினைக்க கூடாது அப்படி நினைத்தால் அந்த பாம்பு 3 நாட்கள் வீட்டை விட்டு போகாது.

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-7.html?showComment=1409445973167#c7251801609786561377

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete